Home /News /sports /

புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் உண்மையான பிரச்சனை இதுதான்

புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் உண்மையான பிரச்சனை இதுதான்

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

பீல்டர்கள் இல்லாத இடத்தில் பேட்டர்கள் தங்கள் ஸ்டான்ஸை மாற்றிக் கொள்ளாமலே பவுண்டரி அடிக்க முடிகிறது என்பதுதான் புவனேஷ்வர் குமாரின் பிரச்சனை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்திய அணி தோல்வியடைவதில் பிரச்சனையில்லை ஆனால் கடந்த மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது எப்படியெனில் முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்து விட்டு பிறகு பவுலிங்கில் கடைசி 4 ஓவர்களில் எதிரணிக்கு 52, 42, 41 ரன்கள் தேவைப்படும். எதிரணிக்கு சவாலான சமயத்தில் தோற்றிருக்கிறது என்பதே. புவனேஷ்வர் குமார் தான் இந்தப் போட்டிகளில் டெத் பவுலிங்கில் பிரதானமானவர். 

இதில் புவனேஷ்வர் குமார் கடந்த 3 போட்டிகளில் 19வது ஓவர்களில் முறையே 16, 14, 19 ரன்களை விட்டுக்கொடுத்திருப்பது வழக்கத்துக்கு மாறானது. இலக்கை தடுக்கும் போது புவனேஷ்வர் குமாரின் அதிக ரன்கள் வழங்கிய ஓவர்கள் இவை என்பது அலாரம் அடிக்கச் செய்துள்ளது. அர்ஷ்தீப் சிங்கை உட்கார வைத்தது தவறோ என்று சிந்திக்க வைத்து விட்டது புவனேஷ்வரின் பவுலிங்.

புவனேஷ்வர் குமார் பவுலிங் செய்யும் விதம் அவரது பந்துகள் திசைமாறிச் செல்வதற்கான வாய்ப்புகளையும் குறிப்பாக டி20-யில் எப்போது வேண்டுமானாலும் சாத்து வாங்குவார் போன்ற பவுலர்தான் இவர். வெங்கடேச பிரசாத் என்று ஒருவர் இருந்தாரே அவர் போல்தான் இவரும், அவரையும் சாத்து சாத்தென்று சாத்தலாம், சாத்தி எடுத்திருக்கிறார்கள், ஒருநாள் போட்டியில் 4 ஓவர்களில் 50 ரன்களையெல்லாம் கொடுத்திருக்கிறார். புவனேஷ்வர் குமாரிடம் வேகம் இல்லை. யார்க்கர்களை சொருக வேகம் வேண்டும்.

பிறகு அந்த வேகம் இருந்தால்தான் ஸ்லோ பந்துகளைப் போடும் போதும் பேட்டர்கள் திடுக்கிட்டு ஆட்டமிழப்பார்கள். பும்ரா போல பந்தை ரிலீஸ் செய்வதில் பேட்ஸ்மென்களை திகைக்க வைக்கும் தன்மையும் இல்லை, மிகவும் நீட்டான ஆக்‌ஷனுடையவர் புவனேஷ்வர். இவரது ஆக்‌ஷனை சுலபமாக பிக் செய்து விடலாம். புவனேஷ்வர் குமார், கெவின் பீட்டர்சன் சேவாக் போன்ற வீரர்களுக்கெல்லாம் வீசவில்லை,  வீசியிருந்தால் ஒருவேளை தன் பவுலிங் பற்றி புரிந்திருப்பார்.எனவே புவனேஷ்வர் குமார் துல்லியமாக வீசவில்லை எனில் அன்று சாத்தி எடுத்து விடுவார்கள், இது அவரது ஆக்‌ஷனில் உள்ள ஒரு சாதகமின்மை. புதியப் பந்திலேயே 4 ஓவர்களை கொடுத்து விட வேண்டும். அதில் சாத்து வாங்கினால் மாற்று பவுலர்களை வைத்திருக்க வேண்டுமே தவிர கடைசி ஓவர்களில் அவரைக் கொண்டு வரக்கூடாது, மிடிலில் எதிரணியின் பலவீனமான பேட்டர் இருந்தால் ஒரு ஓவர் கொடுத்துப் பார்க்கலாம்.

ஆனால் உண்மையான  பிரச்சனை என்னவெனில் நேற்று மேத்யூ வேட், கிரகாம் கிரீன் இருவருமே பெரிய அளவில் தன் நிலைகளை மாற்றிக் கொள்ளாமல் ஸ்கூப் ஷாட், ஒதுங்கிக் கொண்டு ஆடுதல் போன்றவற்றை முயற்சிக்காமலேயே சாதாரணமாகவே ஆடி பவுண்டரிகளைக் குவித்தனர் என்பதே. பீல்டர்கள் இல்லாத இடத்தில் பேட்டர்கள் தங்கள் ஸ்டான்ஸை மாற்றிக் கொள்ளாமலே பவுண்டரி அடிக்க முடிகிறது என்பதுதான் புவனேஷ்வர் குமாரின் பிரச்சனை. இனி இதையெல்லாம் மாற்ற முடியாது, ஒன்று புவனேஷ்வர் குமாரை தூக்க வேண்டும். அல்லது அவரை சாமர்த்தியமாகப் பயன்படுத்த வேண்டும், இதற்கு கேப்டனின் மூளைத்திறம் அவசியம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Bhuvneshwar Kumar, Cricket

அடுத்த செய்தி