• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சினை சந்தித்து என்னுடைய பதக்கத்தை காட்டவேண்டும் - பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா பட்டேல் விருப்பம்

சச்சினை சந்தித்து என்னுடைய பதக்கத்தை காட்டவேண்டும் - பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா பட்டேல் விருப்பம்

பவினா படேல், சச்சின்

பவினா படேல், சச்சின்

சச்சின் டெண்டுல்கரை நேரில் பார்க்க விரும்புவதாக பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற பவினா படேல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் சீன வீராங்கனை யிங் சூ- வுடன் மோதினார். இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யிங் சூ - வுடன் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் பவினா படேல்.

    டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்று பதக்க எண்ணிக்கையை துவங்கி வைத்துள்ளார். பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பவினா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வெற்றிக்குப் பிறகு என்.டி.டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘சச்சின் டெண்டுல்கரால் நான் எப்போதும் உத்வேகம் அடைந்துள்ளேன். என்னுடைய கண்களால் நான் அவரைப் பார்க்க வேண்டும். அவருடைய உத்வேமான பேச்சு எனக்கு கூடுதல் மன உறுதியைக் கொடுக்கும். தியானம்தான் என்னுடைய சக்தி. டேபிள் டென்னிஸ் அப்படி ஒரு போட்டிதான். அது உலகின் இரண்டாவது வேகமான விளையாட்டு. என்னுடைய மனதை தியானத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறேன்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: