பாராலிம்பிக் போட்டி : வரலாற்று சாதனை படைத்த பவினா படேல்

பவினா படேல்

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பவினா.

  • Share this:
    பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்  ( கிளாஸ் 4 ) பிரிவில் இந்திய வீராங்கனை பவினா வெள்ளி வென்றார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு  டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல்  சீன வீராங்கனை யிங் சூ- வுடன் மோதினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை  யிங் சூ - வுடன் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் பவினா படேல். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்று பதக்க எண்ணிக்கையை துவங்கி வைத்துள்ளார். பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பவினா.    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: