15 வருட உழைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது - ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி சிறப்பு நேர்காணல்

பவானி தேவி

Bhavani Devi Interview | ஒலிம்பிக் ஆடனும்ங்கிறது என்னுடைய கனவு. டிவியிலே எவ்வளவோ ஒலிம்பிக் மேட்ச் பார்த்திருக்கேன். நான் அங்க ஆடனும்னு கனவு கண்டிருக்கேன். அது நடக்கும்போது நான் எமோஷனல் ஆகிட்டேன்.

 • Share this:
  ஒலிம்பிக் வாள்வீச்சில் பங்கேற்ற பவானி தேவியுடன் நியூஸ் 18 தமிழ்நாடு  நடத்திய நேர்காணல்..

  கேள்வி: ஒலிம்பிக்கில் பங்கேற்ற அந்த உணர்வுகள் எப்படி இருந்தது..

  பதில்: முதல்நாள் எனக்கு இருந்த அந்த உணர்வுகளை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த தருணத்திற்காகத் தான் கடந்த 15 வருடங்களாக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த தருணத்திற்காக நான் நிறைய விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருந்தனர். அவர்களின் ஊக்கம் இல்லாமல் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. என்னை முழுவதுமாக நம்பி என்னை ஆதரித்ததனால் மட்டுமே என்னால் என்னுடைய கனவை அடைய முடிந்தது.

  பவானி தேவி


  Also Read:  ஒலிம்பிக் லைவில் மண்டியிட்டு ப்ரபோஸ் செய்த கோச்.. துள்ளிக்குதித்த வீராங்கனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

  இந்தப்பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. இது மிக நீண்ட பயணமாக இருந்தது. அதேசமயம் கொஞ்சம் கடினமாகவும் இருந்தது. அது எல்லாம் இந்த ஒலிம்பிக் போட்டியில் நான் விளையாடும் போது அவை மிகவும் பயணுள்ளதாக இருந்தது. நிறைய பேர் உனக்கு இந்த விளையாட்டு வேண்டாம் என அட்வைஸ் பண்ணாங்க. வேற வேலைக்கு போன்னு கூட சொன்னாங்க. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற போது நான் என் வாழ்க்கையில் சரியான முடிவை எடுத்திருக்கிறேன் என நினைத்தேன். என் பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கான பலன் கிடைத்துள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.  கேள்வி: இந்திய கொடியுடன் ஒலிம்பிக் மைதானத்தில் நின்றது எப்படி இருந்தது.

  பதில்: ஒலிம்பிக் ஆடனும்ங்கிறது என்னுடைய கனவு. டிவியிலே எவ்வளவோ ஒலிம்பிக் மேட்ச் பார்த்திருக்கேன். நான் அங்க ஆடனும்னு கனவு கண்டிருக்கேன். அது நடக்கும்போது நான் எமோஷனல் ஆகிட்டேன். அதையெல்லாம் ஓரம் வைத்து விட்டு மேட்ச்-ல கவனமாக இருந்தேன். ஒலிம்பிக் வந்து முதல் போட்டியிலே வெளியேறினால் இத்தனை வருட உழைப்புக்கு அர்த்தமில்லாமல் போகும். முதல் போட்டியில் வெற்றிப்பெற்றேன்.

  பவானி தேவி


  இரண்டாவது போட்டியில் மனான் புருனே கடினமான ஃப்ளேயர்ன்னு தெரியும். அவருக்கு எதிராக சில வியூகங்களை வகுத்தோம். அவரை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் களமிறங்கினேன். அவருக்கு எதிராக புள்ளிகளை எடுக்க நான் முயற்சி செய்துக்கொண்டேதான் இருந்தேன். எந்த தருணத்திலும் நான் விட்டுக்கொடுக்கவில்லை. அவர் சிறப்பாக விளையாடியதால் வெற்றிப்பெற்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தப்போட்டியில் பெரிய தவறு செய்ததாக நான் நினைக்கவில்லை. இந்த போட்டியின் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளது. நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். இந்த அனுபவங்கள் என்னை சிறந்த வீராங்கனையாக மாற்றும்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: