விளையாட்டாக பள்ளியில் வாள்சண்டைக்கு பெயர் கொடுத்த பவானி! - இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்பு

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி

ஒரு வீராங்கனையாக, பெண்ணாக  இந்த இடம் வரை வந்ததற்கு முதல் முக்கிய காரணம் குடும்பத்தின் ஒத்துழைப்பு, அது சரியாக எனக்கு கிடைத்ததன் ரிசல்ட் தான் இந்த சாதனை

 • Share this:
  விளையாட்டாக பள்ளியில் வாள்சண்டை போட்டிக்கு பெயர் கொடுத்து பிறகு அதையே வாழ்க்கையாக நினைத்து தனது விடாமுயற்சியால் ஒலிம்பிக் கனவை சாத்தியப்படுத்தியிருப்பதாக வடசென்னை சிங்கப்பெண் வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

  ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிலிருந்து வாள்சண்டை போட்டிக்கு தகுதிபெற்றுள்ள பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த  வடசென்னையை வீராங்கனை பவானிதேவி சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் SDAT சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  ஹங்கேரியில் நடைபெற்ற உலகக் கோப்பை வாள்சண்டை போட்டியில் சேபர் பிரிவில் காலிறுதிவரை முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தார்.

  இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பவானி தேவி.
  அத்துடன் உத்தரகாண்டில் நடைபெற்ற 31 வது தேசிய வாள்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ஒன்பதாவது முறையாக மகுடம் சூடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

  விமானநிலையத்தில் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த பவானி தேவி.. "இந்த சாதனைக்கு பின் நிறைய நபர்களோட முயற்சி அடங்கியிருக்கு, SDAT, SAI, தமிழ்நாடு அரசு, பயிற்சியாளர்கள், குடும்பம் என அனைவரோட ஒத்துழைப்பால் இந்த சாதனை சாத்தியமானதாக மகிழ்ச்சியடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆரம்பித்த எலைட் ஸ்கீம் தான் என்னுடைய ஒலிம்பிக் சாதனைக்கான காரணம் என நன்றி தெரிவித்தார்.
  அத்துடன் ஒரு வீராங்கனையாக, பெண்ணாக  இந்த இடம் வரை வந்ததற்கு முதல் முக்கிய காரணம் குடும்பத்தின் ஒத்துழைப்பு, அது சரியாக எனக்கு கிடைத்ததன் ரிசல்ட் தான் இந்த சாதனை என குடும்ப நபர்களின் ஒத்துழைப்பையும், ஊக்கத்தின் முக்கியத்துவத்தையும் கூறி மகிழ்ச்சியடைந்தார்.

  பவானி தேவி


  கொரோனோ காலம் சற்று சிரமமாக இருந்ததாகவும் கடைசி நேரத்தில் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி பெல்ஜியத்தில் ரத்தாகி ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் ஹங்கேரியில் நடைபெற்றது, அதில் பங்கேற்பதே சிரமமாக அமைந்தது இருப்பினும் விடாமுயற்சியுடன் பங்கேற்று முதல் வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டிக்குள் நுழையவுள்ளேன் என மகிழ்ச்சியடைந்தார்.
  Published by:Ramprasath H
  First published: