முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி லீக் தொடரில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு சாம்பியன்!

புரோ கபடி லீக் தொடரில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு சாம்பியன்!

பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது

பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது

மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் பெங்களூரு 38-33 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

  • Last Updated :

ஆறாவது புரோ கபடி லீக் தொடரில், குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற 6-வது புரோ கபடி தொடரில் 12 அணிகள் பங்கேற்று விளையாடின. மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற, இறுதிப் போட்டியில், குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

புள்ளிகள் பட்டியலில், இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற அணிகள் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. எனினும் இடைவேளையின் போது, குஜராத் அணி, 16-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், ஆக்ரோஷம் காட்டிய பெங்களூரு அணி, தொடர்ந்து புள்ளிகள் குவித்து ஆட்டத்தை சமன்படுத்தியது. அந்த அணியின் பவன் குமார் தொடர்ந்து ரைடு புள்ளிகளை குவித்து, தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டம் முடிவதற்கு 3 நிமிடங்கள் இருந்த நிலையில் இரு அணிகளும் தலா 29 புள்ளிகள் பெற்றிருந்ததால், ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர். பெங்களூருவின் பவன்குமார் கடைசி நிமிடத்தில் 4 ரைடு புள்ளிகள் குவிக்க பெங்களூரு அணி 36-39 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கோப்பையுடன் 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம்பெற்ற குஜராத் அணிக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

Also see...

top videos

    First published:

    Tags: Pro Kabaddi League 2018