Home /News /sports /

Winter Olympics 2022 | குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்று தொடக்கம்  

Winter Olympics 2022 | குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்று தொடக்கம்  

குளிர்கால ஒலிம்பிக் போட்டி

குளிர்கால ஒலிம்பிக் போட்டி

விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ளன.

    கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளைப் போன்றே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. முற்றிலும் பனி கட்டிகளால் ஆன மைதானங்களில் நடைபெறும் போட்டி என்பதால் விளையாட்டு என்பதைத் தாண்டி கண்களுக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் விருந்து படைகின்றன.

    சீன தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. BIRDS NEST மைதானத்தில் தொடக்க விழா கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. இதன்மூலம் கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இரண்டையும் நடத்திய நகரம் என்ற பெருமையை பெய்ஜிங் பெற உள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிக்காக பெய்ஜிங், யாங்கிங் (Yanqing), ஜாங்சியாகவ் (Zhangjiakou) ஆகிய 3 இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    15 பிரிவுகளில் மொத்தம் 109 பதக்கங்களுக்காக வீரர், வீராங்கனைகள் மல்லுக்கட்ட உள்ளனர். இந்தியா சார்பில் காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஆரிஃப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார். இவர் ஆல்பைன் ஸ்கீயிங் ஸ்லலோம் மற்றும் ஜெயிண்ட் ஸ்லாலோம் (alpine skiing slalom and the giant slalom) போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

    Also Read : யு-19- உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்- யாஷ் துல் தந்தை திட்டவட்டம்

    குளிர்கால ஒலிம்பிக் திருவிழாவிற்கான ஜோதி புதன்கிழமை சீனாவை வந்தடைந்தது. இதனையடுத்து சீனப்பெருஞ்சுவர் உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளிலும், ரோபோட் மூலம் கடலுக்கு அடியிலும் ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டம் நடைபெற்று வருகிறது. கூடைப்பந்து வீரரான யாவ் மிங், 2020ஆம் ஆண்டு இந்தியாவுடனான எல்லை மோதலில் காயமடைந்த சீன சிப்பாய் ஆகியோரும் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்பவர்களில் அடங்குவர்.

    குளிர்கால ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, சீனாவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் கூறி அரசாங்க ரீதியில் இந்த போட்டிகளை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புறக்கணித்துள்ளன. அதாவது வீரர்கள் போட்டியில் பங்கேற்றாலும் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் அரசு அதிகாரிகள் யாரும் இதில் பங்கேற்கமாட்டார்கள்.

     

    இதேப்போன்று பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் இந்தியா கலந்து கொள்ளாது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட ராணுவத் தளபதியை மெகா விளையாட்டு நிகழ்விற்கு அதன் தீபமேந்துபவராக நியமித்து சீனா கௌரவித்ததை கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: China

    அடுத்த செய்தி