ஐ.பி.எல் போட்டிகளை நடத்த நியூசிலாந்து ஆர்வம்...!

மாதிரி படம்

  • Share this:
இந்தாண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை நாடுகளை தொடர்ந்து நியூசிலாந்து அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும் உள்நாட்டில் நடத்தவே பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் நடப்பாண்டு மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களை கடந்தும் ஐ.பி.எல் போட்டி நடத்துவது தொடர்பாக பிசிசிஐ முடிவு செய்யாததால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனோ பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உள்நாட்டில் நடத்துவதற்கு சாத்தியமில்லாததால் வெளிநாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதனால் கொரோனோ வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை நாடுகள் ஆர்வம் தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தும் ஐ.பி எல் போட்டியை நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் ரக்பி போட்டிகளை ரசிகர்களுடன் வெற்றிகரமாக நடத்தி வருவதால் அந்நாடு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய பிசிசிஐ பொருளாளர் நியூசிலாந்து நாடு ஆர்வம் தெரிவித்துள்ளது என்றும் ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நேரம் இந்தியாவிற்கு ஒத்துவராததால் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Also read... சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 1000 படுக்கை வசதி... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பான முடிவும் எடுக்கப்படாததால் ஐ.பி.எல் போட்டி தொடர்பான முடுவு எடுக்கப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. எது எப்படியோ இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: