கொரோனா பாதிப்பு: பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி வழங்கிய பி.சி.சி.ஐ

அதானி குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார்.

  • Share this:
கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக பிரதமர் நிதிக்கு பி.சி.சி.ஐ 51 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், கட்டட வேலைகள் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் முறைசாரா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று மோடி கோரிக்கைவிடுத்தார். அதனையடுத்து, பிரபலங்கள் பலரும் நிவாரண நிதியளித்துவருகின்றனர்.

டாடா நிறுவனம் சார்பில் 1,500 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மேலும், அதானி குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 51 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று இரண்டு தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, பி.சி.சி.ஐ சார்பில் 51 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

Also see:
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading