ஐ.பி.எல்.போட்டிகளை ஜூலையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13-வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29-ம் தேதி நடைபெற இருந்தது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக போட்டிகள் ஏப்ரல் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் ஜூலையில் போட்டிகள் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்பு உரிமம் பெற்றோர் என பலரும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இவர்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக பார்வையாளர்களே இல்லாமல் கூட போட்டிகளை நடத்தலாமா என பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.