அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளாக இருக்கத் தடை

news18
Updated: August 9, 2018, 5:24 PM IST
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளாக இருக்கத் தடை
கோப்புப் படம்
news18
Updated: August 9, 2018, 5:24 PM IST
லோதா குழுவின் பரிந்துரைகளில் பிசிசிஐ தேர்தலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை உள்ளிட்ட சிலவற்றை நீக்கியுள்ள உச்சநீதிமன்றம், 30 நாட்களுக்குள் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டம் நடைபெற்றதாக முகுல் முத்கல் குழு கடந்த 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து பிசிசிஐ மறுசீரமைப்பு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு பல்வேறு பரிந்துரைகளை வரைவு அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் அளித்தது. அதனை உடனடியாக அமல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லோதா குழு பரிந்துரைகளில் பலவற்றுக்கு பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது லோதா குழுவின் முக்கிய பரிந்துரையான ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு முறை என்கிற அம்சம் நீக்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த செளராஷ்டிரா, வதோதரா மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மும்பை, விதர்பா ஆகிய அணிகளுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளன. ரயில்வே, சர்வீசஸ், பல்கலைக்கழகங்களின் சங்கம் போன்றவை தங்களுடைய முழு உறுப்பினர் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

இருமுறை ஒருவர் ஒரு பதவி வகித்த பின்னரே இளைப்பாறல் காலத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சீர் திருத்தங்களை 4 வாரங்களுக்குள் செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
First published: August 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...