முகப்பு /செய்தி /விளையாட்டு / ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தொடர் : சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தொடர் : சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சாய்னா நேவால் (கோப்பு படம்)

சாய்னா நேவால் (கோப்பு படம்)

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஸ்பெயினின் பார்சிலோனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், ஜெர்மனியின் யுவோன் லி-யை எதிர்த்து விளையாடினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-16, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-21, 21-18 என்ற நேர்செட் கணக்கில வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின்ஹெச்எஸ் பிரனோய் 18-21, 15-21 என்ற நேர் செட்கணக்கில் மலேசியாவின்டேரன் லியுவிடம் தோல்வி அடைந்தார்.

Also Read : தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..!

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 10-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மத்தியாஸ் கிறிஸ்டியன்சென், அலெக்சாண்ட்ரா போஜ் ஜோடியை வீழ்த்தியது.

First published:

Tags: Badminton, Saina Nehwal