Home /News /sports /

துலீப் கோப்பை கிரிக்கெட் : தலையில் தாக்கிய பந்து.. வலியால் துடித்த வெங்கடேஷ் அய்யர்

துலீப் கோப்பை கிரிக்கெட் : தலையில் தாக்கிய பந்து.. வலியால் துடித்த வெங்கடேஷ் அய்யர்

வெங்கடேஷ் அய்யர் தலையில் தாக்கிய பந்து

வெங்கடேஷ் அய்யர் தலையில் தாக்கிய பந்து

பீல்டர் எறிந்த த்ரோ ஒன்று வெங்கடேஷ் அய்யரின் பின் தலையில் பட்டதால் அவர் வலியால் துடித்தார். மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டதால் அங்கிருந்த ரசிகர்கள் பதறினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
பீல்டர் எறிந்த த்ரோ ஒன்று வெங்கடேஷ் அய்யரின் பின் மண்டையைத் தாக்க மைதானத்திலேயே ஆம்புலன்ஸ் வந்து பரபரப்பான சம்பவத்தில் வெங்கடேஷ் அய்யர் உடல் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வெங்கடேஷ் அய்யர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது காஜா என்ற வீரர் பந்தை பீல்டிங் செய்யும்போது எறிந்தார். அது, வெங்கடேஷ் அய்யரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார்.

மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டதால் அங்கிருந்த ரசிகர்கள் பதறினர். எனினும் வெங்கடேஷ் அய்யர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, உடனடியாக வெங்கடேஷ் அய்யர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

Read More: ரிட்டையர்மெண்ட் கிளப்புக்கு பெடரரை வரவேற்று செரீனா உருக்கம்

இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார். அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மூளை அதிர்ச்சி எதுவும் ஏற்படாமல் தப்பினார் வெங்கடேஷ் அய்யர். இது பற்றி அவரே கூறும்போது, “என் காதுக்குக் கீழ் பந்து வந்து தாக்கியது, உடனே அதிர்ச்சியாக இருந்தது. இப்போது நன்றாக இருக்கிறேன். 2வது இன்னிங்ஸில் இறங்குவேனா என்று தெரியவில்லை, 24 மணி நேரம் என் நலம் கண்காணிக்கப்படும், அதன் பிறகுதான் தெரியவரும்” என்றார்.
Published by:Srilekha A
First published:

Tags: Coimbatore, Cricket

அடுத்த செய்தி