• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மல்யுத்தத்தில் அசத்தும் பஜ்ரங், வினேஷ் போகத்... கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை!

மல்யுத்தத்தில் அசத்தும் பஜ்ரங், வினேஷ் போகத்... கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை!

வினேஷ் போகத் - பஜ்ரங் புனியா.

வினேஷ் போகத் - பஜ்ரங் புனியா.

#BajrangPunia, #VineshPhogat Recommended For Rajiv Gandhi #KhelRatnaAward | சர்வதேச தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பஜ்ரங், சீனாவில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச அளவில் மல்யுத்த போட்டியில் அசத்தி வரும் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோரது பெயர்கள் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை தரும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. சில வீரர்களின் பெயர்களை அந்தந்த விளையாட்டு சங்கங்களே பரிந்துரை செய்யும்.

    அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச அளவில் மல்யுத்த போட்டியில் அசத்தி வரும் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோரது பெயர்கள் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பஜ்ரங், சீனாவில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

    Bajrang Punia, Vinesh Phogat, வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
    பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் வினேஷ் போகத் - பஜ்ரங் புனியா.


    அதற்கு முன்பு, கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் தங்கம் வென்று அசத்தியிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பஜ்ரங் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கமும், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும் வென்றார். இவர்கள் தவிர, ராகுல் அவேர், ஹர்பிரீத் சிங், திவ்யா கக்ரான், பூஜா தந்தா ஆகியோரது பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    விரேந்தர் குமார், சுஜித் மான், நரேந்திர குமார் மற்றும் விக்ரம் குமார் ஆகியோரது பெயர்கள் துரோணாச்சாரியா விருதுக்கும், பீம் சிங் மற்றும் ஜெய் பிரகாஷ் ஆகியோரது பெயர்கள் தயான்சந்த் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    ரசிகரின் முகத்தில் குத்திய கால்பந்து வீரர் நெய்மர்... வைரலாகும் வீடியோ!

    நள்ளிரவில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது.. உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

    எல்லை மீறிய ரோகித் சர்மாவுக்கு 15% அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

    ரூ.40 கோடி மோசடி.. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது தோனி வழக்கு!

    Also Watch...








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: