விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்

2015-ம் ஆண்டு டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

Web Desk | news18
Updated: November 5, 2018, 2:06 PM IST
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்
பாபர் அசாம்
Web Desk | news18
Updated: November 5, 2018, 2:06 PM IST
டி20 போட்டியில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலியிடமிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தட்டிப்பறித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி துபாயில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபர் அசாம், 48 ரன்கள் எடுத்த போது டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் 26 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 27 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்திருந்தார். 2015-ல் விராட் கோலி இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது கோலியின் இந்த சாதனை பாபர் அசாம் வசம் சென்றுள்ளது. இந்த போட்டியில் 167 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 119 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரையும் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்..

அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனான முன்னாள் இந்திய வீரர்!

#HappyBirthdayVirat “வீரர்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்!”Also See..

First published: November 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்