Home /News /sports /

Video: எனது ரோல்மாடல் ஃபெடரெர்... 13 வயதிலேயே சொன்ன சிட்சிபாஸ்!

Video: எனது ரோல்மாடல் ஃபெடரெர்... 13 வயதிலேயே சொன்ன சிட்சிபாஸ்!

ரோஜர் ஃபெடரெர் மற்றும் சிட்சிபாஸ்.

ரோஜர் ஃபெடரெர் மற்றும் சிட்சிபாஸ்.

#RogerFederer as his tennis idol: #Tsitsipas | ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியன் ஃபெடரெரை, 7-6, 7-6, 7-5, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் சிட்சிபாஸ் வீழ்த்தினார். #AusOpen

  • News18
  • Last Updated :
    ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் ஃபெடரெரை வீழ்த்திய 20 வயதான ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், தனது ரோல் மாடல் அவர் தான் என்று 13 வயதிலேயே கூறியுள்ளார்.

    ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலிய ஓபன். கடந்த 14-ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரெர், 14-ம் நிலையில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் (வயது 20) உடன் மோதினார்.

    Roger Federer, ரோஜர் ஃபெடரெர்
    ரோஜர் ஃபெடரெர். (AP)


    நடப்பு சாம்பியன் ஃபெடரெரை 7-6, 7-6, 7-5, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் சிட்சிபாஸ் வீழ்த்தினார். இதன்மூலம், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். கிரான்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த வீரர் என்ற பெருமையையும் சிட்சிபாஸ் பெற்றார்.

    Stefanos Tsitsipas, ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ்
    ஃபெடரெரை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ். (AFP/Getty Images)


    இந்நிலையில், சிட்சிபாஸ் 13 வயதிலேயே தனது ரோல்மாடல் ரோஜர் ஃபெடரெர் என்று கூறியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “எனது ரோல்மாடல் ரோஜர் ஃபெடரெர். சில ஆண்டுகளில் டென்னிஸ் தரவரிசையில் முன்னிலை பெறுவேன்” என்று அவர் கூறுகிறார்.



    இந்த வீடியோவை, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    Photos: ஆஸி. ஓபனில் செரீனாவின் அசத்தல் கிளிக்ஸ்!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Roger Federer, Tennis Star

    அடுத்த செய்தி