பனிச்சறுக்கு வீரர் அலெக்ஸ் புல்லின் கடலில் மூழ்கி உயிரிழப்பு

பனிச்சறுக்கு வீரர் அலெக்ஸ் புல்லின் கடலில் மூழ்கி உயிரிழப்பு
பனிச்சறுக்கு வீரர் அலெக்ஸ் புல்லின் (Photo Credit: AP)
  • Share this:
இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய பனிச்சறுக்கு வீரர் அலெக்ஸ் புல்லின் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் பாம்கடல் பகுதியில் அலெக்ஸ் புல்லின் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியுள்ளார். அவருக்கு வயது 32.

இதனைக் கண்ட ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு அலெக்ஸ் புல்லின் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also read... நிற வெறிக்கு எதிராக குரல் கொடுக்க நாங்களும் தயார் - இங்கிலாந்து வீரர்கள்

உயிரிழந்த அலெக்ஸ் புல்லின் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலிய விளையாட்டு அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading