தென் ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு

news18
Updated: March 12, 2018, 11:52 AM IST
தென் ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு
சதம் அடித்த ஏபி டி வில்லியர்ஸ்
news18
Updated: March 12, 2018, 11:52 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து  382 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே நிதானமாக விளையடியது.  தொடக்க ஆட்டக்காரர் எல்ஹர் 197 பந்துகளை சந்தித்து  57 ரன்களை எடுத்தார். அம்லாவும் அரைசதம் எடுத்து அவுட் ஆனார். டி வில்லியர்ஸ் கடைசி வரை நின்று தென் ஆப்பிரிக்க அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார். மொத்தம் 146 பந்துகளை சந்தித்த அவர் 20 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 126 ரன்கள் எடுத்தார். டி வில்லியர்ஸின் சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்க்ஸில் 382 ரன்களை குவித்துள்ளது.

தனது 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. தற்போது நிலவரப்படி, 63 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

 
First published: March 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்