ஊக்க மருந்து புகார் - தமிழகத்தைச் சேர்ந்த கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு; 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து புகார் - தமிழகத்தைச் சேர்ந்த கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு; 4 ஆண்டுகள் தடை
வீராங்கனை கோமதி
  • Share this:
கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ள கோமதி மாரிமுத்து, தான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அசைவ உணவில் அந்த வஸ்து இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Also read... பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவது யார்? போட்டியில் இருந்து விலகிய பிரேசில்

Also read...

 
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading