• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Hima Das: தடகள வீராங்கனை ஹிமாதாசுக்கு அரசுப்பணி... காவல்துறை டிஎஸ்பியாக நியமிக்க முடிவு

Hima Das: தடகள வீராங்கனை ஹிமாதாசுக்கு அரசுப்பணி... காவல்துறை டிஎஸ்பியாக நியமிக்க முடிவு

தடகள வீராங்கனை ஹிமாதாஸ்

தடகள வீராங்கனை ஹிமாதாஸ்

தடகள வீராங்கனை ஹிமாதாசை காவல்துறை டிஎஸ்பியாக நியமிக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

  • Share this:
    அதிவேகத்தில் ஓடி தடகள போட்டிகளில் வெற்றி பெறுவதால் திங் எக்ஸ்பிரஸ் என்று செல்லப்பெயர் கொண்டவர் ஹிமாதாஸ். 2019ல் மட்டும் அடுத்தடுத்து 5 தங்கப்பதக்கங்களை வென்று உலகளவில் கவனத்தை ஈர்த்தவர்.

    விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி அளிப்பது தொடர்பாக அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப்போட்டிகள், காமன் வெல்த் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல்நிலை அரசுப்பணி வழங்கவும், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு 2ம் நிலை அரசுப்பணிகளை வழங்குவதற்கும் அந்த மாநில அமைச்சரவை சட்டத்திருத்தம் மேற்கொள்கிறது.

    இந்நிலையில் தடகள வீராங்கனை ஹிமாதாசை காவல்துறை டிஎஸ்பியாக நியமிக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

    மேலும் படிக்க.... விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் - மத்திய அமைச்சர் அமித் ஷா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: