ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள் 2018: தனிநபர் குதிரையேற்றத்தில் பதக்கம் வென்று இந்தியா சாதனை

ஆசிய போட்டிகள் 2018: தனிநபர் குதிரையேற்றத்தில் பதக்கம் வென்று இந்தியா சாதனை

ஃபௌவாட் மிர்ஸா

ஃபௌவாட் மிர்ஸா

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் குதிரையேற்றத்தில் இந்தியா 20 வருடங்களுக்குப் பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தனிநபர் குதிரையேற்றத்தில் இந்தியா சார்பில் ஃபவுத் மிர்ஸா கலந்துகொண்டார். குதிரையின் மீது சவாரி செய்தபடி லாவகமாக தடைகளைக் கடந்து அவர் முன்னேறினார்.  இப்போட்டியில் 26.40 புள்ளிகள் பெற்ற மிர்ஸா 2-ம் இடம் பிடித்தார்.

    ஜப்பானின் யோசியாக்கி (OIWA YOSHIAKI) 22.70 புள்ளிகள் பெற்று தங்கத்தை வென்றார். மிர்ஸா பயன்படுத்திய குதிரையின் கால்கள் துரதிஷ்டவசமாக ஒரு கம்பத்தின்  மேல் பட்டதால் அவர் தங்கத்தை இழந்தார். சீனாவைச் சேர்ந்த ஹுவா தியான் அலெக்ஸ் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார்.

    தனிநபர் குதிரையேற்றத்தில் 1982-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது. இதேபோல் குழு பிரிவிலும்  மிர்ஸா, ராகேஷ் குமார், ஆஷிஷ் மாலிக் மற்றும் ஜித்தேந்தர் சிங் அடங்கிய குழு வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Asian Games 2018