சீனாவின் ஹாங்சோ, ஜெஜியாங் நகரங்களில் செப்டம்பர் 10 முதல் 25 ம் தேதி வரை நடைபெறவிருந்த 19 வது ஆசிய விளையாட்டுப்போட்டி கொரோனா பரவல் அச்சம் காரணமாக அடுத்த ஆண்டிற்கு தேதி குறிப்பிடாமல் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒத்திவைத்தது
ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த இந்த போட்டிகள் செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Also read :
சிஎஸ்கே நிலை பரிதாபம்.. ஏன் இப்படியெல்லாம்...? - சேவாக் சாடல்
சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.