ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய போட்டிகள்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ரா.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இது இந்தியா வென்றுள்ள 8-வது தங்கமாகும்.

  இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதலில் பங்குபெற்ற நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே 83.46 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜுக்கு மொத்தமிருந்த 6 வாய்ப்புகளில் இரண்டு ஃபவுல் ஆனது. அவருடைய 3-வது வாய்ப்பில் 88.06 மீட்டர்களும், 4-வது மற்றும் 5-வது வாய்ப்புகளில் முறையே 83.25 மீ மற்றும் 86.36 மீ எறிந்தார். 88.06 மீ தூரம் எறிந்ததன் மூலம் தேசிய அளவில் நீரஜ் செய்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

  இதுவரை நடந்த ஆசியப் போட்டிகளிலேயே, ஈட்டி எறிதலில் இந்தியா வென்றுள்ள 2-வது பதக்கம் இது. இதற்கு முன் 1982-ம் ஆண்டு குர்ஜெத் சிங் வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தப் போட்டியில் சீனாவின் லையு கியுஷென் 82.22 மீ தூரம் ஈட்டி எறிந்து 2-ம் இடத்தையும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 80.75மீ ஈட்டி எறிந்து 3-ம் இடத்தையும் பிடித்தனர். நீரஜ் சோப்ரா காம்ன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவுக்காகத் தங்கம் வென்றவர்.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Asian Games 2018