ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள் 2018: இறுதிப்போட்டியில் மகளிர் ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி

ஆசிய போட்டிகள் 2018: இறுதிப்போட்டியில் மகளிர் ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி

வெள்ளி பதக்கம் வென்ற மகளிர் ஹாக்கி அணி

வெள்ளி பதக்கம் வென்ற மகளிர் ஹாக்கி அணி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டு போட்டிகளில், நேற்று நடைபெற்ற 13-வது நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கூட கிடைக்கவில்லை. மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானிடம் தோல்வியடைந்ததால், நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

  18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நுழைந்தது.

  இந்தப் போட்டியில், இந்தியா ஜப்பானை எதிர்கொண்டது. இதில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. ஜப்பான் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்த நிலையில், இந்தியாவுக்கு வெள்ளியே கிடைத்தது. இதனால், இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

  இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப்பட்டியலில் 13 தங்கம், 23 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Asian Games 2018