மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி!

#AsianAthleticsChampionships: #GoldMedalist #Gomathi #Marimuthu's Shocking Background | விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி.

மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி!
சாதனை படைத்த கோமதி மாரிமுத்து.
  • News18
  • Last Updated: April 23, 2019, 3:36 PM IST
  • Share this:
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

கண்கலங்க வைக்கும் கோமதியின் பின்னணி:

திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இவரது கிராமம்.


குறிப்பாக, இந்தக் கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம் கூட கிடையாது. பேருந்து வசதிகள் குறைவுதான். அப்படி இருந்தும் தனது வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு தினமும் சென்று பயிற்சி செய்துள்ளார் தங்க மங்கை கோமதி.

இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின்மீது தீராத காதல் கொண்டுள்ளார். கல்லூரி காலங்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம்:அதிகாலை 3 மணிக்கு எழும் கோமதியை, அவரது தந்தை மாரிமுத்து சைக்கிளில் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். ஒரு மகன், 3 மகள்களுடன் குடும்பம் வறுமையில் தவித்தபோது மாரிமுத்து - ராசாத்தி தம்பதியினர் தங்களது கடைசி மகளான கோமதியின் தடகள பயிற்சிக்கு ஊக்கமளித்து வந்துள்ளனர்.

கோமதியின் விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி:

2013 முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார். இதற்கிடையே அவரின் தந்தை மாரிமுத்து, 2016-ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இருப்பினும், தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி. தற்போது அவர் பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார்.

Also Watch...அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்