ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய கோப்பை: சூப்பர் 4 அட்டவணை குறித்து பாக்., வங்கதேச அணிகள் அதிருப்தி

ஆசிய கோப்பை: சூப்பர் 4 அட்டவணை குறித்து பாக்., வங்கதேச அணிகள் அதிருப்தி

கோப்புப் படம்

கோப்புப் படம்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் ஆட்டங்கள் நிறைவடைவதற்கு முன்னதாகவே, சூப்பர் 4 பிரிவு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின. ஏ- பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், பி - பிரிவில் இருந்து வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் சூப்பர்-4 பிரிவுக்கு முன்னேறியுள்ளன.

  பி- பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி முடிவடையும் முன்னரே, சூப்பர் 4  அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதாவது, ஏ- பிரிவில் இந்திய அணிக்கு முதலிடமும், பாகிஸ்தானுக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளன. பி-பிரிவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு முதலிடமும், வங்கதேசத்துக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளன.

  அட்டவணைப்படி இந்தியா நாளை நடைபெறும் முதல் போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கிறது. அடுத்து 23-ம் தேதி பாகிஸ்தானையும், 25-ம் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி நாளை ஆப்கானிஸ்தானையும், 26-ம் தேதி வங்கதேசத்தையும் சந்திக்கிறது.

  ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையேயான ஆட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகின்றன. புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28-ம் தேதி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

  இந்த அட்டவணைக்கு பாகிஸ்தான், வங்கதேச அணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் துபாயிலேயே விளையாடுமாறு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

  இதேபோல வங்கதேச கேப்டன் மொர்தாசாவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டதற்கு மாறாக திடீரென்று விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். புதிய அட்டவணை காரணமாக வங்கதேச அணி இரு நாட்கள் தொடர்ந்து விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இதனிடையே, இந்திய அணியில் காயமடைந்துள்ள அக்சர் பட்டேலுக்குப் பதில் மூத்த வீரர் ரவிந்திர ஜடேஜா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும், காயத்தால் அவதியுறும் ஹர்த்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு பதில் தீபக் சகார், சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  சூப்பர்-4 அட்டவணை

  போட்டி தொடங்கும் நேரம் - மாலை 5 மணி (இந்திய நேரம்)

  செப். 21 - இந்தியா - வங்கதேசம் (துபாய்)

  செப். 21 - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் (அபுதாபி)

  செப். 23 - இந்தியா - பாகிஸ்தான் (துபாய்)

  செப். 23 - ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் (அபுதாபி)

  செப். 25 - இந்தியா - ஆப்கானிஸ்தான் (துபாய்)

  செப். 25 - பாகிஸ்தான் - வங்கதேசம் (அபுதாபி)

  செப். 28 - இறுதிப் போட்டி (துபாய்)

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Asia cup cricket, Cricket, India and Pakistan, Indian cricket team