முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்

ஆசிய கோப்பை ஹாக்கி

ஆசிய கோப்பை ஹாக்கி

Asia Cup Hockey 2022 | இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.

  • Last Updated :

11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் 'டிரா' கண்டது.

இதையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக்கில் ) தென்கொரியாவுடன் நேற்று மோதியது. இந்த போட்டியில் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப், மணீந்தர் சிங், சேஷே கவுடா, மாரீஸ்வரன் தலா ஒரு கோல் அடித்தனர்.

சூப்பர் 4 சுற்றின் முடிவில் மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்றிருந்தன. எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் மலேசியா, தென் கொரியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

First published:

Tags: Hockey