• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மிரட்டிய மலிங்கா... விரட்டிய முஷ்பிகுர் ரஹீம்.. அசத்தல் வெற்றி பெற்ற வங்கதேசம்!

மிரட்டிய மலிங்கா... விரட்டிய முஷ்பிகுர் ரஹீம்.. அசத்தல் வெற்றி பெற்ற வங்கதேசம்!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் வங்கதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்கும் 14-வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. துபாயில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொர்டாசா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் தமிம் இக்பால் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் லிட்டான் தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 3-வது வீரராக களம் இறங்கிய சாஹிப் அல் ஹசன், மலிங்கா பந்துவீச்சில் டக் அவுட் ஆன நிலையில், வங்கதேச அணி தவித்தது.

    இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம் மற்றும் முகம்மது மிதுன் இணை 3-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தது. 150 பந்துகளை சந்தித்த முஷ்பிகுர் ரஹீம் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 144 ரன்களை குவித்தார். முகம்மது மிதுன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில், நெடுநாட்களுக்குப் பிறகு களம் கண்ட மலிங்கா 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. எந்த வீரரும் 30 ரன்களை தாண்டவில்லை. தில்ரூவன் பெரைரா அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 35.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சார்பில், கேப்டன் மொர்டாசா, முஜ்தபிஜூர் ரகுமான், மெஹிதி ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: