கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
பிரபல கால்பந்து வீரர் மரடோனா காலமானார். அவருக்கு வயது 60.

மரடோனா
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 10:59 PM IST
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மரடோனா. அர்ஜெண்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்களை அடித்திருக்கும் மரடோனா, அந்நாட்டின் அணிக்கு 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தார்.
மரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது வழக்கறிஞர் மரண செய்தியை உறுதி செய்துள்ளார். மரடோனாவின் மறைவு உலகம் முழுவதிலும் இருக்கும் கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மறைவுக்கு பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.