குட்டி தேவதையை வீட்டிற்கு வரவேற்ற விராட் கோலி, அனுஷ்காவின் குடும்பம்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சிப் பதிவு..
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை விகாஸ் கோலி பகிர்ந்து கொண்டதும், அவர்களது ரசிகர்கள் கமெண்ட் செக்சனில் வாழ்த்துச் செய்திகளை குவித்து வருகின்றனர்.

குட்டி தேவதையை வீட்டிற்கு வரவேற்ற விராட்
- News18 Tamil
- Last Updated: January 13, 2021, 8:02 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்தது. தேவதை பிறந்த சந்தோஷத்தை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது, “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். அனைவருடைய அன்புக்கும், பிரார்த்தனைக்கும், வாழ்த்துகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். அனுஷ்காவும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக உணர்கிறோம். இந்த நேரத்தில் நீங்கள் எங்களுடைய பிரைவசியை மதிப்பீர்கள் என்று நம்புகிறோம். அன்புடன் விராட்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
விராட்டின் இந்த பதிவுக்கு பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல குழந்தையை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், குழந்தையின் வருகையை விராட் மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் குடும்பத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில், விராட்டின் மூத்த சகோதரர் விகாஸ் கோலி, குழந்தை கால்களின் படத்தை வெளியிட்டு விராட் மற்றும் அனுஷ்கா தம்பதியினரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பதிவில், மென்மையான போர்வையில் போர்த்தப்பட்ட குழந்தையின் சிறிய கால்களின் படத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் "Welcome" என்று எழுதி குழந்தையை வரவேற்றார். மேலும் அந்த பதிவில் "Happiness overboard... angel in the house,” என கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை விகாஸ் கோலி பகிர்ந்து கொண்டதாக நினைத்து, அவர்களது ரசிகர்கள் கமெண்ட் செக்சனில் வாழ்த்துச் செய்திகளை குவித்து வருகின்றனர். பின்பு, அது பொதுவான படம் என்றும், விராட் குழந்தையின் புகைப்படத்தை நாங்கள் வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் விகாஸ் கோலி மாமா ஆனதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விராட்டின் சகோதரி பாவ்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாவது, "ஒரு அழகான சிறிய தேவதையின் அத்தையாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. பெருமைமிக்க பெற்றோர் விராட் மற்றும் அனுஷ்காவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அனுஷ்கா சர்மா கர்ப்பமானார். மேலும், இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று வழிநடத்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டி, டி20 தொடர் முடிந்த பிறகு, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடினார்.
அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிரசவ தேதி நெருங்கி வந்ததால் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார். இந்த நிலையில், இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா சர்மா உடற்பயிற்சி செய்யும்போது அவருக்கு கணவர் விராட் கோலி உதவி செய்யும் புகைப்படம், வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

— Virat Kohli (@imVkohli) January 11, 2021

View this post on Instagram