குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி மற்றும் அனுஷ்கா

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி மற்றும் அனுஷ்கா

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி மற்றும் அனுஷ்கா

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ளானர்.

 • Share this:
  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2017 டிசம்பர் 11-ம் தேதி இவர்கள் திருமணம் இத்தாலியில் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அனுஷ்கா சர்மா திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா லாக்டவுனில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.. அவர்களின் முதல் குழந்தை இந்த வருடம் ஜனவரியில் வரவேற்க உள்ளதாகாவும் தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையில், தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்தார். கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்களின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை தொடங்கி உள்ளோம்“ என்றார்.

  மேலும் படிக்க...பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்...   
  View this post on Instagram

   

  A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)


  அதனைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தங்கள் குழந்தையை கையில் வைத்திருக்கும்  ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். மேலும் பெண் குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: