“சாப்பிட வாங்க“ இன்ஸ்டாகிராம் நேரலையில் கோலியிடம் அனுஷ்கா சேட்டை

“சாப்பிட வாங்க“ இன்ஸ்டாகிராம் நேரலையில் கோலியிடம் அனுஷ்கா சேட்டை
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
  • Share this:
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உடன் கோலி நேரலையில் பேசி கொண்டிருந்த போது சாப்பிட நேரமாச்சு வாங்க போகலாம் என்று கமெண்ட் செய்து கலகலக்க வைத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வீட்டில் முடங்கி உள்ளனர்.

இதனிடையே இந்திய வீரர் விராட் கோலியை கெவின் பீட்டர்சன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேட்டி எடுத்தார். கெவின் பீட்டர்சன் கேட்ட பல கேள்விகளுக்கு விராட் கோலி பதிலளித்தார். ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் அனுஷ்காவுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். நாங்கள் இருவரும் இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்ததில்லை.


விராட் கோலியின் நேரலையின் போது அனுஷ்கா சர்மா, “போதும் போதும் உங்கள் உரையாடல். சாப்பிட வாங்க நேரசமாச்சு“ என்று கமெண்ட் செய்தார். இதற்கு கெவின் பீட்டர்சன்னும் “பாஸ் சொல்லிவிட்டார் நேரம் முடிந்தது“ என்று நகைச்சுவையாக கூறி நேரலையை முடித்துக் கொண்டார்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading