Home /News /sports /

Sports Roundup | பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!

Sports Roundup | பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!

தெற்காசிய பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை,  ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மீண்டும் முதலிடம் பிடித்த கொல்கத்தா அணி உள்ளிட்ட விளையாட்டுச் செய்திகளின் தொகுப்பு.

தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்று அசத்தல்:

நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்று சாதித்துள்ளார்.  புதுக்கோட்டையை சேர்ந்த அனுராதா 87 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டார். இவர் ஸ்நாட்ச் பிரிவில் 90 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ எடையும் சேர்த்து மொத்தம் 200 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார்.

ஐ.எஸ்.எல் தொடரில் கொல்கத்தா மீண்டும் முதலிடம்:

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கவுகாத்தி அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா முதல் பாதியிலேயே 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. கடைசிக் கட்டத்தில் மேலும் ஒரு கோல் அடிக்கவே, 3க்கு 0 என கொல்கத்தா வெற்றிபெற்றது. இதன் மூலம், மொத்தம் 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்தோனிசியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்:

பிலிப்பைன்சில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில், இந்தோனேசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த அணி, அரையிறுதியில் மியான்மருடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டி கூடுதல் நேரம் வரை சென்றது. முடிவில், 4-2 என இந்தோனேசியா போராடி வெற்றிபெற்றது.

நார்வே உலகக் கோப்பை பனிச்சறுக்கு:

நார்வேயில் நடைபெறும் உலகக் கோப்பை பனிச்சறுக்குப் போட்டியில் உள்ளூர் வீரரான மேக்னஸ் ரிப்பர் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தொடர்ந்து அசத்தி வரும் இவர் ஸ்கை ஜம்பிங், கிராஸ் கண்ட்ரி உள்ளிட்ட 4 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தார்.

டிராக் சைக்கிள் தொடரில் மேடிசன் முதலிடம்:

நியூசிலாந்தில் நடைபெறும் டிராக் சைக்கிள் தொடரில், மகளிருக்கான பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேடிசன் முதலிடம் பிடித்தார். போட்டி தொடங்கியலும் மின்னல் வேகத்தில் சைக்கிளை ஓட்டிச் சென்ற இவர், தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி