இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஜாலியாக நடனம் ஆடிய விடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தங்கள் பணியில் பிரபலமாக இருக்கும் ஸ்டார்கள் ட்ரெண்டில் இருப்பது கடினம். அவர்களது வேலையில் மும்முரமாக இருப்பார்கள். ஆனால் பி.வி.சிந்து தனது பேட்மிண்டன் பயிற்சியோடு சேர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது நடனங்களை வெளியிட்டு வருகிறார்.
நான் வெற்றியை விரும்புபவன், அது இல்லையெனில் நிறுத்தி விட வேண்டியதுதான் - ரோஜர் பெடரர் போட்ட ஓய்வு குண்டு
விளையாட்டு பயிற்சி, போட்டிகள்,விளம்பரங்கள் என்று அடுத்தடுத்து பிசியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விஷயங்களில் தனது பங்கையும் பி.வி.சிந்து பதிவிட்டு விடுகிறார்.
இன்ஸ்டாகிராமில் அதிக மக்களால் பகிரப்படும் பாடல்களுக்கு சிந்துவின் பதிவும் மிஸ் ஆவதில்லை. அரபிக்குத்து ட்ரெண்ட் ஆகும் நேரத்தில் தனது அழகிய நடந்தால் நெட்டிசன்களை ஈர்த்தார்.
அதே போல் இப்போது அண்டே சுந்தரானிக்கி படத்தின் பாடலுக்கு நடனமாடி பதிவிட்டுள்ளார். பிரபலமாகி வரும் அதன் நடன அசைவுகளை அப்படியே பிரதிபலித்துள்ளார். அது நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
பிங்க் டிஷர்ட், கருப்பு ட்ராக்ஸ், ஸ்னீக்கர்ஸ் அனைத்து படு கூலாக நடனமாடியுள்ளார். சிங்கப்பூர் வைப்பில் தனது இந்த இன்ஸ்டா ரீலில் நடனத்தை பகிர்ந்துள்ளார் சிந்து.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.