50 வயதைத் தொட்ட சுழற்பந்து ஜாம்பவான்: அனில் கும்ளேவின் மிகச் சிறந்த போட்டிகள் இவைதான்

உலகளவில் பேட்ஸ்மேன்களை மிரட்டிய இந்திய சுழற்பந்து ஜாம்பவானாக ஜொலித்த அனில் கும்ளேவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வயது 50.

50 வயதைத் தொட்ட சுழற்பந்து ஜாம்பவான்: அனில் கும்ளேவின் மிகச் சிறந்த போட்டிகள் இவைதான்
அனில் கும்ளே
  • Share this:
விளையாட்டு வீரர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல. விளையாட்டில் அவர்கள் படைத்த சாதனைகள் என்றும் நிலையானவை, நினைவு கூறத்தக்கவை. விளையாட்டை அமர்ந்து பார்க்கும் நமக்கு விளையாட்டை விளையாடும் ஒரு சில வீரர்கள் தங்களது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் பணயம் வைத்து விளையாட்டை விளையாடி சாதனைகளை படைக்கின்றனர். அந்தவகையில் அனில் கும்ப்ளேவின் சாதனையை அவரது ஐம்பதாவது வயதில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளதை காண்போம்.

வலது கை லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. இந்தியாவின்மிக வெற்றிகரமான பந்து வீச்சாளர் ஆவார். 956 சர்வதேச விக்கெட்டுகளுடன், இந்தியாவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இவரே. ஒட்டுமொத்த கிரிக்கெட் பிளேயர்களில் இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 619 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியருக்கும் இது பெருமைமிக்க தருணம். டெஸ்ட் போட்டிகளில் 8 - 10 விக்கெட்டுகள் மற்றும் 35 - 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்போது கும்ப்ளே 50 வயதை எட்டியுள்ளார். கிரிக்கெட்டில் அவர் எடுத்த சில சிறந்த தருணங்களை இப்போது நினைவு கூர்வோம்.

6 for 12 vs West Indies at Kolkata, 1993 (ODI)


1993ம் ஆண்டு ஒரு குளிர்கால போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தது, இந்த இலக்கு பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது. இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒரு நல்ல தொடக்கத்தைப் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 1 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. ஆனால் 6.1 ஓவர்களில் வெறும் 12 ரன்களை விட்டுக்கொடுக்கும் அதே நேரத்தில் கடைசி ஆறு விக்கெட்டுகளை எடுத்து நம்பமுடியாத செயல்திறனை கும்ப்ளே காட்டினார். வெஸ்ட் இண்டிஸ் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில்  ஆட்ட நாயகனாக அனில் கும்ப்ளே தேர்வுப்செய்யப்பட்டார்.

5 for 33 vs New Zealand at Wellington, 1993-94 (ODI)

இந்த போட்டியில் நியூசிலாந்திற்கு இந்தியா 256 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த போட்டியில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 3.30 என்ற எகானமி விகிதத்தில் பந்து வீசினார். இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தனது அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். மீண்டும், கும்ப்ளே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். கும்ப்ளே ஒருநாள் கிரிக்கெட்டில் ஈடு இணையற்ற சாதனைகள் பெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரது சாதனைகள் உலகமே போற்றுகிறது. அவரது சில சிறந்த டெஸ்ட் போட்டிகளை நாம் பார்த்தல் நாம் அதை தெரிந்துகொள்ளலாம்.4 for 69 and 7 for 59 vs Sri Lanka at Lucknow, 1994 (Test)

இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல் முறை. இது அவரது 14வது போட்டி மட்டுமே. முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது ஆட்டத்தில் மேலும் ஏழு விக்கெட்டுகளை எடுத்து சாதித்தார். இந்த போட்டியில் இந்தியா ஒரு முறை மட்டுமே பேட் செய்ய வேண்டியிருந்தது, இரு இன்னிங்ஸ்களிலும் இலங்கை ஆல் அவுட்டாக இருந்தது. கும்ப்ளே ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்

4 for 75 and 10 for 74 v Pakistan, Delhi, 1999 (Test)

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றை உருவாக்கிய கும்ப்ளேவின் அற்புதமான தருணம் இது. ஜிம் லேக்கருக்குப் பிறகு, சாதனையை நிகழ்த்திய இரண்டாவது மனிதர் இவர்தான். இது 19 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியாகும். அனில் கும்ப்ளே, மீண்டும், இந்த போட்டியிலும் சிறந்த வீரராக தேர்வுசெய்யப்பட்டார் .
POINTS TABLE:

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULT DATA:

MOST SIXES:

8 for 141 and 4 for 138 v Australia, Sydney, 2004 (Test)

இது 2003-2004ல் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவின் சுற்றுப்பயணத்தின் நான்காவது டெஸ்ட் போட்டியாகும். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. தனிநபர்கள் மற்றும் அணிகள் அதிக ஸ்கோர்களைக் கண்டது, இதன் விளைவாக இறுதியில் சமநிலை ஏற்பட்டது. இருப்பினும், இது கும்ப்ளேவின் ஸ்பெல்லை நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் முதல் எட்டு போட்டிகளையும், இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்தார், இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது சிறந்த செயல்திறன். இந்த போட்டியில் அவர் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வுசெய்யப்பட்டார். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (241 *) காரணமாக ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த முழு தொடரிலும் கும்ப்ளேவின் பங்களிப்பு முக்கியமானது, இது சமநிலையில் முடிந்தது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading