விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஏஞ்சலிக் கெர்பர்

news18
Updated: July 12, 2018, 8:23 PM IST
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஏஞ்சலிக் கெர்பர்
கெர்பர்
news18
Updated: July 12, 2018, 8:23 PM IST
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி நாட்டு வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறுகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன் போட்டியிட்டார்.

இரண்டும் வீராங்கனைகளும் சம்பலத்துடன் இருந்ததால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. உலக அரங்கில் 11-வது நிலையில் உள்ள ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என்ற கணக்கில் போட்டியை கைப்பற்றினார். இதன் மூலம் ஏஞ்சலின் கெர்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆடவர் காலிறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ரபேல் நடால் வெற்றிப் பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் செர்பிய வீரர் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இஸ்னர் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன்னை எதிர்கொள்கிறார்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...