Tokyo Olympics : ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்கள் சாதித்து பதக்கங்களைக் குவிக்க அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டிலிருந்து இம்முறை 12 வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்க, பதக்கங்களைக் குவிக்க வாழ்த்துகள் என பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று தொடங்கியுள்ளது.

    ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில்கடந்த ஆண்டுடே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறுகின்றன. இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், வில்வித்தை தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். அடுத்த சுற்று போட்டியில் ஒலிம்பிக் தொடரை வெற்றியுடன் தொடங்கி இந்திய வீரர்களுக்கான எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் அதிகரித்திருக்கிறார்.

    தீபிகா குமாரி


    வில்வித்தை மகளிர் ஒற்றைய பிரிவு தகுதிச் சுற்று போட்டியில் 64 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 663 புள்ளிகளை பெற்று இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 இடத்தை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 56 வீராங்கனைகள் உள்ளிட்ட 127 வீரர்களும் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     



    2 “டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் இந்திய அணியினர் பங்கேற்கின்றனர். பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.”

     



     

    3. “தமிழ்நாட்டிலிருந்து இம்முறை 12 வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தொடர் ஓட்டம், கத்திச்சண்டை, டேபிள் டென்னிஸ், படகுப்போட்டி,  துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்தட்டும்” என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

     



    Must Read : ஒலிம்பிக் வில்வித்தை தகுதிச் சுற்றில் தீபிகா குமாரி 9வது இடம்

    இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published: