ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கம் வென்றுகொடுத்த ராணுவவீரர்

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கம் வென்றுகொடுத்த ராணுவவீரர்

அமித் பங்கல்.

அமித் பங்கல்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பங்கல் தங்கம் வென்றுள்ளார். 

இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குத்துச்சண்டையின் 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அமித் பங்கல், ஒலிம்பிக் சாம்பியனும், உலக அளவில் குத்துச் சண்டையில் பிரபலமான உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் தஸ்மட்டோவை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் 3-2 என்ற சுற்றுகள் கணக்கில் தஸ்மட்டோவை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார் அமித். இதன் மூலம் கடந்த வருடம் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தஸ்மட்டோவிடம் தோற்றதற்கு, ராணுவ வீரரான அமித் பழி தீர்த்துள்ளார்.

இறுதிப் போட்டி தொடங்கியதிலிருந்தே பல்வேறு உக்திகளை கையாண்ட அமித், மிக சாதூர்யமாக விளையாடி தங்கத்தை தட்டிச் சென்றார். இதுவரை ஆசியப் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Saravana Siddharth
First published:

Tags: Asian Games 2018