இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதிப் பெற்றுள்ளார். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், ஜப்பானின் அகனே யமகுச்சியை பி.வி.சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் செட்டை, 16-21 என்ற கணக்கில் பிவி சிந்து இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 21-16, 21-19 என அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, தாய்லாந்தின் சொச்சுவாங்கை எதிர்கொள்ள இருக்கிறார். இதில் ஏற்கனவே சாய்னா நேவால், காயம் காரணமாக இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.