• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடிப்பை கண்டு வியந்த ரகானே...

சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடிப்பை கண்டு வியந்த ரகானே...

சூர்யா நடிப்பை கண்டு வியந்த ரகானே.

சூர்யா நடிப்பை கண்டு வியந்த ரகானே.

ரஹானே, ரசிகர்களிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் உரையாட ஆரம்பித்தார்.

  • Share this:
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தை பார்த்தேன், படம் மிகவும் பிடித்திருந்தது, படத்தில் சூர்யாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகரமான ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக உள்நாட்டில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வீரர்கள் சென்னை வந்திறங்கியுள்ளனர். வலைப் பயிற்சி தொடங்க இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்திய அணியினர் அவரவரது குடும்பங்களுடன் நேரம் செலவிட்டு, ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் உரையாடியும் வருகின்றனர்.

(முதல் டெஸ்ட் பிப்ரவரி 5 முதல் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும், இரண்டாவது போட்டி பிப்ரவரி 13 முதல் நடைபெறும், இரு அணிகளும் பிப்ரவரி 2 முதல் பயிற்சி தொடங்குவதற்கு முன்பு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்) அப்படிச் சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் தலைமை வகித்த ரஹானே, ரசிகர்களிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் உரையாட ஆரம்பித்தார்.

அப்போது ஒரு ரசிகர், "சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதாவது தமிழ்த் திரைப்படம், தொடரைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

சூர்யா நடிப்பை கண்டு வியந்த ரகானே.


இதற்கு பதிலளித்த ரஹானே, "ஆம், ‘சூரரைப் போற்று’ படத்தை சப்டைட்டில் உதவியுடன் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. நடிகர் சூர்யா அற்புதமாக நடித்திருந்தார். இதைச் சொல்லும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. வேறு ஏதாவது திரைப்படப் பரிந்துரை இருக்கிறதா அஸ்வின்?" என்று கேட்டார்.

இதற்கு அஸ்வின், 'நீங்கள் ஏன் ‘மாஸ்டர்’ பார்க்கக் கூடாது?' என்று பரிந்துரை செய்தார்.

இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, தமிழ்த் திரைப்படங்களைச் சக வீரர்களுக்கு அறிமுகம் செய்வதால் பலரும் அஸ்வினைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் ஷாலினி உஷாதேவியுடன் திரைக்கதை அமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் இவர். ஹரி வெர்ஷனாகவும், கௌதம் மேனன் வெர்ஷனாகவும் இல்லாமல் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமாக ராஜபாட்டையில் நடந்திருக்கிறார்.

அழுதுகொண்டே தன் இயலாமையை, ஆற்றாமையை, கையறு நிலையை வெளிப்படுத்தும் சூர்யாவைப் பார்க்க முடிந்தது. ஆனால், சின்னதாய் புன்னகையைக் கூடச் சிந்தாத அளவுக்கு சிரிப்பென்றாலே என்ன என்று தெரியாத, கதாபாத்திரத்துடன் ஒன்றிய சூர்யாவைப் பார்ப்பது புதிதாக இருந்தது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். சுவாரஸ்யமாக, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் பல பிரிவுகளில் ஆஸ்கார் 2021 பந்தயத்திலும் சூரரைப் போற்று படம் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: