ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கால்பந்து வீரர்கள் சந்தேஷ் ஜின்கான், பாலா தேவி பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

கால்பந்து வீரர்கள் சந்தேஷ் ஜின்கான், பாலா தேவி பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

Arjuna Award | ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரள அணியில் விளையாடும் சந்தேஷ் அந்த அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய ஆடவர் அணியிலிருந்து சந்தேஷ் ஜின்கான் மற்றும் மகளிர் அணியிலிருந்து பாலா தேவி ஆகியோர்களின் பெயர்களை இந்திய கால்பந்து சம்மேளனம் அர்ஜூனா விருதிற்காக  விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்து வருகிறது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் தங்கள் அணியில் உள்ள சிறந்த வீரர்களின் பட்டியலை விளையாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.  இறுதியில் நாட்டிற்காக பெருமை சேர்த்த வீரர்களில் யாருக்கு அர்ஜூனா விருது என்பதை தேர்வு செய்யும்.

இதற்காக இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் அர்ஜூனா விருது பெற தகுதியான வீரர்கள் என ஆடவர் அணியிலிருந்து சந்தேஷ் ஜின்கான், மகளிர் அணியிலிருந்து பாலா தேவி ஆகியோரை தேர்வு செய்து விளையாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

26 வயதான சந்தேஷ் இந்திய கால்பந்து அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். சிறந்த தடுப்பு ஆட்டக்காரராகவும், கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். சுனில் சேத்ரி-க்கு பிறகு அணியில் நம்பிக்கையளிக்கும் வீரர்களில் சந்தேஷ் முக்கியமானவராக திகழ்கிறார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரள அணியில் விளையாடும் சந்தேஷ் அந்த அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஸ்காட்டிஷ் மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்காக பாலா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு வெளியே பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை பாலா தேவி என்பது கூடுதல் சிறப்பாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு இவர் முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். இதை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்கள ஆட்டக்காரரான பாலா தேவி இதுவரை நாட்டிற்காக 36 கோல்கள் அடித்துள்ளார்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Arjuna Awards, Football