பி.வி சிந்துவுடன் இருக்கும் நடிகை ராதிகா - வைரலாகும் புகைப்படம்!

ராதிகா - பிவி சிந்து

சிந்துவை வாழ்த்துவதற்காக சிரஞ்சீவி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகா, பேட்மிண்டன் வீராங்கனையை பார்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடிய பி.வி சிந்துவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பேட்மிண்டன் வீரரான சிந்து ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனையடுத்து பல்வேறு விளையாட்டு வீரர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலர், அரசியல் துறையினர், அதிகாரிகள் என பலதரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் ஏராளமானோர் அவரை நேரில் சந்தித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா, சிந்துவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒலிம்பிக்கில் அவர் வென்ற வெண்கலப் பதக்கமும் படத்தில் காணப்பட்டது. இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா, "தங்கத்தை விட அதிகமான வெண்கலம்" என்று தலைப்பிட்டுள்ளார். சிந்துவை வாழ்த்துவதற்காக சிரஞ்சீவி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகா, பேட்மிண்டன் வீராங்கனையை பார்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பி. வி. சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், "நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி-ஜியுடன் இறுதியாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி" என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.

Also Read : பேட்மிண்டன் குயின் பிவி சிந்துவை இப்படி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

மேலும் சிந்து பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும், டோக்கியோ மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றதை காண்பிக்கும் புகைப்படங்களையும் அந்த பதிவில் இணைத்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஒலிம்பிக்கில் நாட்டை பெருமைப்படுத்திய சிந்துவை பலர் வாழ்த்திய அதே சமயத்தில், மற்றவர்கள் வரவிருக்கும் சர்வதேச நிகழ்வுகளில் தனது வெற்றிப் பாதையைத் தொடர வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்தனர்.

Also Read : முகமது சிராஜின் தீவிர ரசிகையான பாகிஸ்தான் தொகுப்பாளினி ஜைனாப் அப்பாஸ்

இந்த நிலையில் நடிகை ராதிகாவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘அருண்விஜய் 33’ படத்தில் நடிகை ராதிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் பழனியில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இதில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 'அருண்விஜய் 33' தவிர, நடிகை சிலம்பரசனின் 'வெந்து தனித்து காடு' என்ற திரைப்படத்திலும் நடிகை ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது சிம்புவுடன் இணைந்து படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த புகைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: