Home /News /sports /

டென்மார்க் சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கம் வென்று நடிகர் மாதவன் மகன் அசத்தல்... பிரபலங்கள் பாராட்டு

டென்மார்க் சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கம் வென்று நடிகர் மாதவன் மகன் அசத்தல்... பிரபலங்கள் பாராட்டு

vedaant  madhavan: நேற்று நடைபெற்ற 1500 மீட்டர் பிரிவுக்கான போட்டியில் வேதாந்த் மாதவன் வெள்ளி வென்ற நிலையில், இன்று 800 மீட்டர் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்

    டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்று நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

    நேற்று நடைபெற்ற 1500 மீட்டர் பிரிவுக்கான போட்டியில் வேதாந்த் வெள்ளி வென்ற நிலையில், இன்று 800 மீட்டர் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து நடிகர் மாதவனுக்கும், அவரது மகனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள மாதவன், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக உள்ளார். அவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க - Danish Open: சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் வெள்ளி பதக்கம் வென்றார்

    அவரது மகன் வேதாந்த் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார்.

    இதையும் படிங்க - ஒலிம்பிக்கில் மகன் பங்கேற்பதற்காக துபாய்க்கு குடிபெயரும் நடிகர் மாதவன்

    அவர் 2026-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். இதையொட்டி, தனது குடும்பத்தினருடன் துபாயில் குடிபெயரப் போவதாக மாதவன் கூறியிருந்தார்.

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்கேற்றுள்ளார். நேற்று நடைபெற்ற 1500 மீட்டர் பிரிவுக்கான நீச்சல் போட்டியில் அவர் வெள்ளி வென்று பலரது கவனத்தை ஈர்த்தார்.

    இந்நிலையில் 800 மீட்டர் பிரிவுக்கான நீச்சல் போட்டியில் வேதாந்த் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    View this post on Instagram

    A post shared by R. Madhavan (@actormaddy)

    இது தொடர்பாக மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'உங்களுடைய ஆசிர்வாதத்தால் தொடர்ந்து வெற்றிகள் கிடைத்து வருகிறது. இன்று 800 மீட்டர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. இதற்காக பயிற்சியாளர் பிரதீப் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள மாதவன் மகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Madhavan

    அடுத்த செய்தி