காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர்கள் அச்சிந்தா மற்றும் ஜெரிமி லால் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால் ரிங் குங்கா களமாடினார். 19 வயதே ஆன இவர் சக போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில், ஸ்னாட்ச் பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் 140 கிலோ எடை தூக்கி மிரள வைத்தார்.
இதேபோன்று, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடை தூக்கி வியக்க வைத்தார். இதன் மூலம் இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி, தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.
சமோவா வீரர் இடேன் மற்றும் நைஜீரியாவின் உமோ ஃபியா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். காமன்வெல்த் சாதனையுடன் ஜெரிமி பதக்கம் வென்றதன் மூலம் பர்மிங் ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்தது.
Chess Olympiad: இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றிபெற்று அசத்தல்
காமன்வெல்த்தில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக ஜெரிமி தெரிவித்தார்.காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில், ஜெரிமி தக்கம் வென்றதால், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் உற்சாகத்தில் திளைத்தனர்.
இந்நிலையில் ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ எடையை தூக்கி அவர் அசத்தினார். இதன் மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 3 தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commonwealth Games, India team