கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் செய்த சாதனைகள்...

கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் செய்த சாதனைகள்...

ராகுல் டிராவிட்

இன்று பிறந்தநாள் காணும் நம் கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் செய்த சாதனைகள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பை காணலாம்.

  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் தி வால் என்றழைக்கப்படும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் 48வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. டிராவிட்டின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். இந்திய கிரிக்கெட் அணியின் ஐகானிக் வீரர், தனது மனோபாவத்திற்கும் நுட்பத்திற்கும் பெயர் பெற்றவர். இவர் பல தசாப்தங்களாக அணிக்கு மிகவும் நம்பகமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார்.

இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் ஆடிய காலகட்டத்தில், அவரை அவுட் ஆக்க எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறந்த வீரர்களின் பந்து வீச்சு தாக்குதல்களுக்கும் எதிராக நின்று எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர். அத்தகைய அவரது திறனுக்காக பெரும்பாலும் ‘தி கிரேட் வால்’ அல்லது ‘தி வால்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர், கடந்த 1996ம் ஆண்டு லார்ட்ஸில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை அவர் விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்களின் எடுத்து 13,288 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து, அதே ஆண்டு அவர் சிங்கப்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை அவர் விளையாடிய 344 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் என மொத்தம் 10,889 ரன்களை குவித்துள்ளார். டிராவிட் கடந்த 2012ம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தான் ஓய்வு பெறப்போகும் அறிவிப்பை, 2011-ல் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவதற்கு முன்பு அறிவித்தார். மேலும், இன்று பிறந்தநாள் காணும் நம் கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் செய்த சாதனைகள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பை காணலாம்.

1.அதிக எண்ணிக்கையிலான பந்துகளை எதிர்கொண்ட ஒரே வீரர்

16 ஆண்டுகளுக்கும் மேலாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் டிராவிட் 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இது அவருடன் அப்போது விளையாடிய சக கிரிக்கெட் வீரர்களை விட மிக அதிகம். ட்ராவிட்க்கு  அடுத்தபடியாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 29,437 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

2.டெஸ்ட் போட்டிகளை விளையாடும் 10 அணிகளில் முதலில் சதம் அடித்தவர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடும் 10 நாடுகளை சேர்ந்த அணிகளில் முதல் சதம் அடித்த பெருமை பேட்ஸ்மேன் டிராவிட்-ஐ தான் சேரும். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தனது முதல் சதத்தை அடித்துள்ளார்.

3.பேட்டிங் பீல்டில் அதிக நேரம் தாக்குபிடித்தவர்:

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை, கிரீஸில் அதிக நேரம் செலவழித்த சாதனையையும் ராகுல் டிராவிட் தான் படைத்துள்ளார். அதிகபட்சமாக இவர் 736 மணிநேரம் கிரீஸில் நின்று விளையாடியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு உலக சாதனையாகும்.

4.டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பீல்டராக அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர்:

நம்பகமான பேட்ஸ்மேன்ஷிப் தவிர, டிராவிட் ஒரு அற்புதமான ஸ்லிப் பீல்டர் ஆவார். இவர் மொத்தமாக 164 டெஸ்ட் போட்டிகளில் 201 கேட்ச்சுகளை எடுத்துள்ளார். இது விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு ஃபீல்டரின் அதிகபட்ச சாதனையாகும்.

5.டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்த முதல் பேட்ஸ்மேன்

மூன்றாம் இடத்தில் விளையாடி 10,000 ரன்களுக்கு மேல் ரன்களை குவித்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் இவர். டெஸ்ட் மேட்ச்சில் 219 இன்னிங்ஸ்களில் 52.88 ஆவரேஜ் வைத்து 10,524 ரன்கள் எடுத்தார். இதில் 28 சதங்கள் மற்றும் 50 அரைசதங்கள் அடங்கும்.

6.பார்ட்னெர்ஷிப் ரெக்கார்ட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட் சில பார்ட்னெர்ஷிப் ரெக்கார்டுகளையும் வைத்துள்ளார். இவர் 32,039 என்ற அதிக எண்ணிக்கையிலான பார்ட்னெர்ஷிப் ரன்களைக் கொண்டுள்ளார். இது விளையாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்தது. 50 பிளஸ் ரன்களை 126 பார்ட்னெர்ஷிப்களிலும், 100 பிளஸ் ரன்களை 88 பார்ட்னெர்ஷிப்களிலும் குவித்துள்ளார். இதுவரை பார்ட்னெர்ஷிப்களில் டிராவிட் 738 ரன்களை எடுத்துள்ளார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ்நாரைன் சந்தர்பால்  பார்ட்னெர்ஷிப் ஆட்டத்தில் 750 ரன்களை குவித்துள்ளார்.

7.நான்கு இன்னிங்ஸ்களில் நான்கு சதங்கள்

நான்கு பேக்-டு-பேக் இன்னிங்ஸ்களில் சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் இவர். 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக டிராவிட் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் நாட்டிங்ஹாம்மில் -115 ரன்கள், லீட்ஸில் 148 ரன்கள், தி ஓவலில் 217 ரன்கள் மற்றும் மும்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன்களை குவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: