ஐ.பி.எல் போட்டிகளுக்காக கார் மேல் ’லைவ் ஸ்கோர் போர்டு’!- அசத்தும் டாக்ஸி ஓட்டுநர்!

சமூக வலைதளங்களில் இந்த டாக்ஸியின் ஐபிஎல் ஸ்கோர் போர்டு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Web Desk | news18
Updated: April 8, 2019, 4:42 PM IST
ஐ.பி.எல் போட்டிகளுக்காக கார் மேல் ’லைவ் ஸ்கோர் போர்டு’!- அசத்தும் டாக்ஸி ஓட்டுநர்!
டாக்ஸி ஸ்கோர் போர்டு
Web Desk | news18
Updated: April 8, 2019, 4:42 PM IST
இந்தியாவில் ஐ.பி.எல் போட்டி நடந்து வருவது பல கிரிக்கெட் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தனது காரின் மேல் பகுதியில் ஐபிஎல் ஸ்கோர் போர்டு வைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாகவே மாறிவிட்டார்.

வீட்டில், அலுவலகத்தில் என அனைத்து இடங்களில் டிவி, செல்ஃபோன் மூலம் ஐபிஎல் ஸ்கோர் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், நீங்கள் சாலையில் பயணத்திக் கொண்டிருந்தால்? அந்த நேரத்தில் உங்களது விருப்பத்துக்குரிய ஐபிஎல் அணி விளையாடிக் கொண்டிருந்தால்? அந்த சங்கடத்தைப் போக்கவே ஐபிஎல் ஸ்கோர் போர்டை டாக்ஸி மேல் வைத்துள்ளார் இந்த ஹைதரபாத் ஓட்டுநர்.

சமூக வலைதளங்களில் இந்த டாக்ஸியின் ஐபிஎல் ஸ்கோர் போர்டு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த டாக்ஸி ஓட்டுநரைக் கொண்டாடி வருகின்றனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யைக் கூட இந்த டாக்ஸி ஸ்கோர் போர்டு கவர்ந்துள்ளது. ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரிக்கெட் தான் வாழ்க்கை என்றால்...’ என்று பெருமிதம் பொங்க டாக்ஸி ஸ்கோர் போர்டு புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த பெங்களூரு அணி!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...