உலக கிரிக்கெட்டையே புரட்டிப் போட்ட 1983 உலகக்கோப்பை வெற்றியை மையப்படுத்தி வெளியாகவுள்ள ‘83’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அணிக்கு வரலாற்றில் முக்கியமான நாளாகும். உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதி கூட நெருங்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. அதுவும் 183 ரன்களை மட்டுமே எடுத்தது, வெஸ்ட் இண்டீஸுக்கு 60 ஓவர்களில் இந்த இலக்கு. ஆனால் அந்த அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மதன்லால் 3 விக்கெட்டுகளையும், ஆட்ட நாயகன் அமர்நாத் 26 ரன்களையும், 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். தமிழ்நாட்டின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அந்த உலகக்கோப்பை இறுதியின் அதிகபட்ச ஸ்கோரான 38 ரன்களை எடுத்தார்.
பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில் அதனை கண்முன்னே கொண்டு வரும் ஒரு கலைப்படைப்பாக தான் ‘83’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்து கதை கரு உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 83 திரைப்படத்தின் டிரைய்லர் இன்று வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கபில் தேவ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 17/5 என்ற நிலையில் இறங்கி 175 ரன்களை 17 பவுண்டரி 6 சிக்சர்களுடன் எடுத்ததை யாரும் மறக்க முடியாது, அன்று இங்கிலாந்தில் வீடியோ ஸ்ட்ரைக் என்பதால் அதன் ஒளி வடிவம் இன்று வரை இல்லாமல் போனது நம் துரதிர்ஷ்டமே, இந்நிலையில் இந்த படத்தில் அந்த கபில்தேவின் மகா இன்னிங்ஸ் குறித்த உள் விவரங்கள் சுவாரசியமாக பேசப்பட்டிருக்கும் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.