’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்

இந்திய விளையாடு அமைச்சகம் சார்பில் 2749 ’கெலோ இந்தியா' திட்ட விளையாட்டு வீரர்களுக்கு தலா 30 ஆயிரம் வீதம் 8.25 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

  • Share this:
ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க இந்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் கெலோ இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

கொரோனோ அச்சுறுத்தலால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் விளையாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் அவர்களுக்கான நிதி உதவியை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா வீரர்களுக்கு 8.25 கோடி நிதி உதவிசுமார் 2749 வீரர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் தலா 30 ஆயிரம் வீதம் 8 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள  21 வகையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 386 வீரர்களுக்கும், ஹரியானா 381,  டெல்லி 225 வீரர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படுள்ளது. தமிழகத்தில் 165 வீரர்களுக்கு தலா 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading