2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் இந்தோனேசியா!

news18
Updated: August 10, 2018, 1:11 PM IST
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் இந்தோனேசியா!
news18
Updated: August 10, 2018, 1:11 PM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றிலே முதன் முறையாக இந்தோனேசியாவின்  இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகர்தா மற்றும் தெற்கு சுமத்ராவின் பாலம்பெங்க் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

வியட்நாமின் ஹனாயில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அந்நாட்டின் பொருளாதார சிக்கல் காரணமாக இந்தோனேசியாவுக்கு மாற்றப்பட்டது. 2வது முறையாக ஆசியா விளையாட்டுகளை இந்தோனேசியா நடத்தவிருக்கிறது. 1962 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்தோனேசியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்தோனேசியா கவனம் செலுத்தி வருகிறது.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அங்கமாக இருக்கும் 45 நாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்களும், உலகின் பல இடங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வரலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இரண்டு நகரங்களிலும்  மும்மரமாக செய்து வருகிறது இந்தோனேசியா. சைக்கிளிங் விளையாட்டுப் போட்டிக்கான அரங்க ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன. பாலம்பெங்கில் இருக்கும் ஸ்ரீவிஜயா ஸ்டேடியத்தின் இருக்கைகளின் எண்ணிக்கையை 23,419-லிருந்து 40,000-ஆக அதிகரித்துள்ளனர்.

விளையாட்டைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக இந்தோனேசியா, டூரிஸம் கோல்டன் டிக்கெட்களை வழங்கவுள்ளது. இந்த டிக்கெட் மூலம் தெற்கு சுமந்தாரா, பாலி, ஜகர்தா, மெடான் மற்றும் ஜம்பி ஆகிய இடங்களைச் சுற்றி பார்க்க முடியும்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...