• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • டாஸ் மூலம் யூரோ கோப்பையை வென்ற இத்தாலியின் வரலாறு தெரியுமா..

டாஸ் மூலம் யூரோ கோப்பையை வென்ற இத்தாலியின் வரலாறு தெரியுமா..

1968-ல் யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணி

1968-ல் யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணி

கடந்த 1968ம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் இத்தாலி  - சோவியத் யூனியன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 • Share this:
  உலகின் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய விளையாட்டு என்றால் கால்பந்து என சிறு குழந்தைகள் கூட சொல்லிவிடும் அந்த அளவிற்கு இந்த விளையாட்டு மீதான ஈர்ப்பும், ஆர்வமும் இன்னும் பலமடங்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது…

  உலகில் அதிக பார்வையாளை ஈர்த்த விளையாட்டுப் போட்டிகளின் பட்டியலில், 2018 உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி என, சரித்திரத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் யூரோ கோப்பை இறுதிப்போட்டி இடம்பிடித்திருப்பதே இதற்கு சாட்சி.. பொதுவாக கால்பந்து தொடர்கள் லீக், மற்றும் நாக் அவுட் போட்டிகளாக நடத்தப்படுகிறது. லீக் போட்டிகளில் ஆட்டம் சமனில் முடிந்தால், இரு அணிளுக்கும் புள்ளிகள் சமமாக பகிர்ந்தளிக்கப்படுவது வழக்கம். ஆனால் நாக் அவுட் போட்டிகளில் கண்டிப்பாக முடிவு வேண்டும் என்ற பட்சத்தில் எவ்வாறு வெற்றி தீர்மானிக்கப்படுவது என்பது பல கட்டங்களை கடந்து வந்துள்ளது.

  Also Read: Lionel Messi: நெய்மருக்கு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி - வைரலாகும் வீடியோ

  நாணயம் சுண்டப்படுவதில் இருந்து – பெனால்டி ஷூட்-அவுட் வரை நீண்டுகொண்டே இருக்கிறது சாம்பியன் பட்டம்.உலக நாடுகளில் கால்பந்து பிரபலமான போது, பிரதான நேரமான 90 நிமிடங்கள் முடிவில், போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தால், கூடுதல் நேரம் வழங்கப்படாது. பெனால்டி ஷூட்-அவுட் முறையும் கடைபிடிக்கப்படாது.இதற்கு மாறாக நாணயம் சுண்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

  கடந்த 1968ம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் இத்தாலி  - சோவியத் யூனியன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இத்தாலியில் நடந்த இப்போட்டியில் பிரதான நேரம் முடியும் வரை. இரு அணிகளும் கோல் அடிக்காததால் சமநிலை எட்டப்பட்டது. இதனால், வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் நடுவருக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. அப்போது, வானிலையும் மோசமாகி மழை பொழிவதற்கான சூழலும் நிலவியது.

  Also Read: Brazil vs Argentina Final | ‘ஏஞ்சல்’ டீ மரியாவின் கோல்- 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டீனா சாம்பியன்: போராடி வீழ்ந்தது பிரேசில்

  இதையடுத்து, டாஸ்  மூலம் வெற்றியை தீர்மானிக்கலாம் என்ற நடுவரின் முடிவுக்கு, இரு அணி கேப்டன்களும் தலையசைத்தனர். உடனடியாக நாணயம் சுண்டப்பட இத்தாலி அணிக்கு சாதமாக டாஸ் விழுகிறது. இத்தாலி அணியின் கேப்டன் Facchetti மட்டும் இன்றி, உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கம் அதிர்ந்தது.தொடர்ந்து இத்தாலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  யுகோஸ்லாவியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியும் 1-1 என சமனில் முடிந்ததால், வெற்றியாளரை தேர்வு செய்ய மீண்டும் குழப்பம் எழுந்தது. ஆனால், இம்முறை டாஸ் சுண்டப்படவில்லை, இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும்  இறுதிப்போட்டி நடத்தப்பட்டது. அதில் 2-0 என வெற்றபெற்று முதல் முறையாக யூரோ கோப்பையை முத்தமிட்டது இத்தாலி.

  Also Read:  CopaAmerica2021 | கோபா அமெரிக்கா தொடரின் சரித்திரப் பக்கங்கள்..!

  பின்னர்,1978-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பெனால்டி ஷூட்-அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாக்-அவுட் போட்டிகள் சமனில் முடிந்தால், வெற்றியை தீர்மானிக்க இன்றளவும்  ஷூட்-அவுட் முறை பின்பற்றப்படுகிறது. மேலும், பிரதான நேரத்தில் ஆட்டம் சமநிலை எட்டப்பட்டால், 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது. அதிலும் முடிவு எட்டப்படாவிட்டால், இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வீதம் பெனால்டி ஷூட்-அவுட் பின்பற்றப்படுகிறது. அதிலும் சமநிலை எட்டப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு முறை மாறி டெத்-பெனால்டி வழங்கப்பட்டு வெற்றி  உறுதி செய்யப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: